நடிகை சமந்தா தன் குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளார் தெரியுமா ?
நடிகை சமந்தாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை சோஷியல் மீடியாவில் அறிவித்துள்ள அவர் குழந்தையின் பெயரையும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இயக்குனர் ராஜ் நிடிமோருவை காதலித்து திருமணம் செய்த சமந்தா, திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் தயாரித்து, நடித்து வெளியான ‘மா இன்ட்டி பங்காரம்’ வெற்றி விழாவில் பங்கேற்றபோது, தான் கற்பமாக இருப்பதை அறிவித்தார் சமந்தா. தொடர்ந்து நடிப்பில் இருந்து சில மாதங்கள் விலகி இருக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சமந்தா, ராஜ் நிடிமோரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை குழந்தையின் கையை பிடித்துக்கொண்டிருக்கும் போட்டோவை வெளியிட்டு, ‘இதுவரை இல்லாத வகையில் மிக மகிழ்ச்சியான நிலையில் எங்கள் மனம்’ என்று குறிப்பிட்டுள்ளார் சமந்தா. தங்கள் மகனுக்கு தேவ் நிடிமோரு என பெயர் வைத்துள்ளனர். ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.