×

நள்ளிரவில் உதவிய சமந்தா -யாருக்கு தெரியுமா ?

 

கடந்த ஆண்டு இயக்குனர் ராஜ் நிடிமோருவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தும் அவர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் ‘எங்கள் தங்கம்’ என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்நிலையில் ராஜ் நிடிமோருவின் சகோதரி ஷீத்தல் நிடிமோரு அவரது சோஷியல் மீடியாவில் சமந்தாவுடன் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோக்களை பதிவிட்டு கூறியிருப்பதாவது:
சமந்தாவின் திருமணம் நடந்த சில நாட்களில் ஐதராபாத்தில் இருக்கும் அவரது வீட்டில் நான் தங்கினேன். ஒரு நாள் இரவு எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. குளிராக இருந்தது, வாந்தி எடுத்தேன், தலை ரொம்ப வலித்தது. படுக்கையில் இருந்து எழுந்து மருந்து, போர்வையை கூட என்னால் எடுக்க முடியாத நிலையில் இருந்தேன். வேறு வழியில்லாமல் எங்கள் குடும்ப வாட்ஸ்ஆப் குரூப்பில் தகவல் தெரிவித்தேன்.
அடுத்த சில நிமிடங்களில் சமந்தாவிடம் இருந்து ‘நான் வருகிறேன்’ என்ற பதில் வந்தது. அவர் யாரையும் எழுப்பாமல், என் சகோதரரை அனுப்பிவிடாமல் அவரே வந்து எனக்கு உதவினார். போர்வைகளை கண்டுபிடிக்க முடியாததால் பெரிய, பெரிய துண்டுகளை எடுத்து வந்து என் மீது போர்த்திவிட்டார்