×

சமந்தா ஒரு பான் இந்திய சூப்பர் ஸ்டார் : பிரபல பாலிவுட் நடிகை..!

 

சமந்தா ஒரு பான் இந்திய நடிகை என்றும், அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்றும் பிரபல பாலிவுட் நடிகை சமீபத்தில் நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.


பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை ஆலியா பட் நடித்த ‘ஜிக்ரா’ என்ற திரைப்படம் நாளை மறுநாள், அதாவது அக்டோபர் 11ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது ஆலியா பட் பேசியபோது, “நடிகை சமந்தா சினிமாவிலும் சினிமாவுக்கு வெளியேயும் ஒரு ஹீரோ. உங்கள் திறமை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. ஆண்கள் உலகத்தில் ஒரு பெண் மிகப்பெரிய வெற்றி பெறுவது எளிதல்ல. நீங்கள் பாலினம் கடந்தவர். நீங்கள் தற்போது மிக உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள். உங்கள் திறமையால் எதிரிகளை வலுவாக எட்டி உதைக்கும் குணம் உங்களிடம் உள்ளது.

null

மேலும் இயக்குனர் திரிவிக்ரம் அவர்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நானும் சமந்தாவும் நடிக்கும் ஒரு திரைப்படத்தை நீங்கள் இயக்க வேண்டும். தெலுங்கு மொழியுடன் எனக்கு தற்போது புதிய உறவு வந்திருக்கிறது. நல்ல படங்களை பாராட்டுவதில் தெலுங்கு ரசிகர்கள் முக்கியமானவர்கள்,” என ஆலியா பட் தெரிவித்தார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.