டேக் 20 பாட்காஸ்ட் தொடங்கிய சமந்தா
Feb 15, 2024, 18:09 IST
தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான படம் குஷி, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா இணைந்து நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடந்து தனது சரும அலர்ஜிக்காக சிகிச்சை எடுக்க சினிமாவிலிருந்து சில காலம் சமந்தா விலகப்போவதாக தகவல் பரவியது. அதற்கு ஏற்றார் போல சமந்தாவும் பல நாடுகளுக்கு சென்று புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார். ஆங்கிலத்தில் மற்றும் இந்தியில் அவர் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், பாட்காஸ்ட் சேனல் ஒன்றை சமந்தா தொடங்கி இருக்கிறார். நண்பருடந் சேர்ந்து இந்த தொழிலை தொடங்கி உள்ளார். வரும் 19-ம் தேதி முதல் வீடியோ வெளியாக உள்ளது.