சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டிரெய்லர் அப்டேட் !
Apr 24, 2025, 18:05 IST
சமந்தா தயாரித்துள்ள ’சுபம்’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட் .வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமிபத்தில் பாலிவுட்டில் வெளியான சிட்டாடல் தொடரில் நடித்திருந்தார். தற்போது மேலும் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். சமந்தா சமீபத்தில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற இந்த நிறுவனத்தின் கீழ் சமந்தா "சுபம்" என்ற படத்தை தயாரித்திருக்கிறார். பிரவின் காந்த்ரேகுலா இயக்கும் இப்படத்தில் பல புது முகங்கள் நடித்திருக்கின்றனர். சமந்தா தயாரித்த முதல் படம் என்பதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் அடுத்த மாதம் 9-ம் தேதி வெளியாக உள்ளது.