இல்லற வாழ்க்கையிலிருந்து மீண்டும் நடிக்க வந்துள்ள பிரபல ஹீரோயின் -யார் தெரியுமா ?
Jul 24, 2026, 06:00 IST
பாலிவுட்டை தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்தவர், சமீரா ரெட்டி. திருமணம், குழந்தைகள் என்று இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த அவர், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.
அவர் கூறியதாவது:
நான் அறிமுகமான படத்தில், எனது உண்மையான நிறத்தைவிட இரண்டு முதல் மூன்று மடங்கு வெளிறிய நிறமுடையவளாக, சாம்பல் நிற ஒப்பனை மூலம் என்னை காட்டினார்கள். அப்போது முகத்தின் நிறத்துடன் உடலின் நிறத்தை பொருத்துவதற்காக, உடல் முழுவதும் ஒப்பனை செய்ய வேண்டியிருந்தது. அழகுக்கான வரையறையை யார் வகுத்தது என்று தெரியவில்லை.