×

"நானும் லஞ்சம் கொடுத்தேன்!...”- விஷாலை தொடர்ந்து சமுத்திரக்கனி சொன்ன குற்றச்சாட்டு.

 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஷால் ‘மார்க் ஆண்டனி’ படத்திற்கு சென்சார் போர்டுக்கு லஞ்சமாக ரூ. 6.50 கோடி கொடுத்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார். இந்த நிலையில் அவரை தொடர்ந்து நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி தானும் ‘அப்பா’ படத்திற்காக பணம் கொடுத்தேன் என்று கூறி மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனியிடம் செய்தியாளர்கள் சித்தார்த்தின் நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர், அதற்கு பதலளித்த அவர் எனக்கு என்ன பிரச்சனை என்றே தெரியாது, காவிரி பிரச்சனை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்கு முடிவே இல்லை, என கூறினார்.

தொடர்ந்து விஷால் படத்திற்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததுபோல உங்களுக்கும் ஏதேனும் அனுபவம் இருக்கிறதா? என் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சமுத்திரக்கனி, “நான் இதுவரை 5 படங்களை தயாரித்துள்ளேன், 15 படங்களை இயக்கியுள்ளேன் இது போல எதையும் நான் சந்தித்ததில்லை. ஆனால், ‘அப்பா’ படத்திற்கு டேக்ஸ் ஃப்ரீ சான்றிதழ் வாங்க பணம் கொடுத்தேன். அது வருத்தமாக இருக்கிறது.” என் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.