×

சமுத்திரகனியின் ‘விமானம்’ தரையிறங்குவது எப்போது ?.. முக்கிய அறிவிப்பு !

 

சமுத்திரகனியின் ‘விமானம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிப்பு மற்றும் இயக்கம் என ஒரே நேரத்தில் இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார் சமுத்திரகனி. அந்த வகையில் சமுத்திரகனியின் வித்தியாசமான நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விமானம்’. இந்த படத்தில் சமுத்திரகனி மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்த படத்தில் அனுசுயா பரத்வாஜ், மீரா ஜாஸ்மீன், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்டோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சிவபிரகாஷ் என்னலா என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படத்தை கே.கே.கிரியேட்டிவ் வெர்க்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். சரண் அர்ஜூன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

தற்போது இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டையொட்டி இப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் 9-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.