×

சமுத்திரகனியின் வித்தியாசமான நடிப்பில் ‘விமானம்’... டீசர் குறித்த புதிய அப்டேட் !

 

சமுத்திரகனியின் ‘விமானம்’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வருகிறார் சமுத்திரகனி. தற்போது அவரது வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விமானம்’. மாறுப்பட்ட கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில்  சமுத்திரகனி மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் சிவபிரகாஷ் என்னலா என்பவர் இயக்கியுள்ளார். 

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படத்தை கே.கே.கிரியேட்டிவ் வெர்க்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். சரண் அர்ஜூன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.  இந்த படத்தில் அனுசுயா பரத்வாஜ், மீரா ஜாஸ்மீன், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்டோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் வரும் ஜூன் 9-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் டீசர் வரும் மே 13-ஆம் தேதி வெளியாகிறது. இந்த டீசருக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.