×

விஜய் குறித்து தரக்குறைவாக விமர்சிக்கும் மீரா மிதுன்.. “இதோட நிறுத்திக்கோங்க”- எச்சரித்த சனம் ஷெட்டி…

பிக் பாஸ் புகழ் மீரா மிதுன் ட்விட்டரில் தொடர்ந்து பல சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக கோலிவுட்டில் ஒரு மாஃபியா கேங் இருக்கிறது என கூறும் அவர், அதனால் தான் தனக்கு எந்த பட வாய்ப்பு வந்தாலும் அதை அவர்கள் தடுத்து விடுகிறார்கள் என கூறி வருகிறார். திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், கங்கனா ரணாவத் போன்ற நடிகைகளை வம்புக்கு இழுத்தார்.. அதனைத்தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யா பற்றியும் அவர் மிக மோசமாக விமர்சித்து வருகிறார்.
 

பிக் பாஸ் புகழ் மீரா மிதுன்  ட்விட்டரில் தொடர்ந்து பல சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக கோலிவுட்டில் ஒரு மாஃபியா கேங் இருக்கிறது என கூறும் அவர், அதனால் தான் தனக்கு எந்த பட வாய்ப்பு வந்தாலும் அதை அவர்கள் தடுத்து விடுகிறார்கள் என கூறி வருகிறார். திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், கங்கனா ரணாவத் போன்ற நடிகைகளை வம்புக்கு இழுத்தார்..

 
அதனைத்தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யா பற்றியும் அவர் மிக மோசமாக விமர்சித்து வருகிறார். இதனால் சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் அவரை ட்விட்டரில் கடுமையாக திட்டித்தீர்த்து வருகின்றனர்..  இதனையடுத்து வீடியோ வெளியிட்டுள்ள மீரா மிதுன், “இதை தான் உங்களது ரசிகர்களுக்கு சொல்லி கொடுத்திருக்கிறீர்களா? நீங்கள் உண்மையிலேயே ஒரு நட்சத்திரத்திற்கு உண்டான நிலையில் தான் இருக்கிறீர்களா விஜய் மற்றும் சூர்யா. இருவரும் cyberbullies கொண்டு ஒரு பெண்ணை மிரட்டுகிறீர்கள்.

இனி என்னை சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் திட்டினாள், விஜய் மற்றும் சூர்யா மனைவிகளை அசிங்கமாக திட்டுவேன். மேலும், சூர்யா மற்றும் விஜய் இருவருக்கும் புடவை மற்றும் வளையலை அனுப்புகிறேன் என்று மோசமாக பேசி வீடியோ வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் , ”உங்களுக்கு பதில் அளிக்க அவர்கள் இறங்கி வரவும் மாட்டாங்க. இதுக்கு நானே போதும் உங்களுக்கு பதில் சொல்ல. Cyber Bullying, Harassment என சொல்வதை தயவு செய்து நிறுத்துங்கள், இதை நீங்கள் தான் செய்து கொண்டு இருக்கிறீர்கள். இதனால் ஒரு நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைக்கும், பிரபலம் ஆகலாம் என நீங்கள் நினைத்து செய்கிறீர்கள்.. “
“இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் போதும்.  உங்க ட்விட்டர் கணக்கை பார்த்து கொள்ளுங்கள். எல்லோரும் ரிப்போர்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள். விரைவில் deactivate ஆக போகிறது பார்த்துக்கொள்ளுங்கள்” என சனம் ஷெட்டி குறிப்பிட்டு இருக்கிறார்.