“லியோ படத்தில் இப்படி பண்ணுவாரு எதிர்பார்க்கல”- லோகேஷ் மீது சஞ்சய் தத் கோபம்
இயக்குநர் லோகேஷ் மீது கோவமாக உள்ளேன் என நடிகர் சஞ்சய் தத் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் லியோ. திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரி குவித்த இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம்வாசுதேவ் மேனன், மடோனா, சாண்டி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சஞ்சய் தத், “நடிகர் விஜய்யுடன் படம் பண்ணியிருக்கேன், எனக்கு அது ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மேல் எனக்கு கோபம். லியோ படத்தில் எனக்கு பெரிய கதாபாத்திரம் கொடுக்காமல் என்னை வீணடித்து விட்டார். அந்த படத்தில் எனக்கு கொடுத்த கதாபாத்திரம் பெரிய அளவில் இல்லை” என்றார்.