காமெடி சரவெடியில் உருவாகியுள்ள ‘கிக்’.. சந்தானம் படத்தின் டீசர் வெளியீடு !
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிக்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சந்தானம் திரைப்படம் என்றாலே காமெடிக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் உருவாகியுள்ள திரைப்படம ‘கிக்’. கன்னடத்தில் வெளியான ‘லல் குரு’, ‘கானா பஜானா’, ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்த பிரசாந்த் ராஜ் இப்படத்தை இயக்கிவுள்ளார். பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜூன் ஜன்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சந்தானத்திற்கு ஜோடியாக ‘தாராள பிரபு’ படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை தன்யா ஹோப் நடித்துள்ளார். இவர்களுடன் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, YG மகேந்திரன், ஷகிலா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முழு நீள காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை. ஃபார்ச்சூன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வழக்கம் சந்தானத்தின் சரவெடி காமெடி கலாட்டாவில் உருவாகியுள்ள இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.