×

நாளை வெளியாகும் ‘கிக்’ டீசர்.. சந்தானம் படத்தின் கலக்கலான அறிவிப்பு !

 

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிக்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

எப்போது காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் சந்தானம், அதே ஜோனரில் புதிய படத்தில் நடித்துள்ளார். ‘கிக்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த படம் முழு நீள காமெடி திரைப்படமாக உருவாகி வருகிறது. ஃபார்ச்சூன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னடத்தில் வெளியான ‘லல் குரு’, ‘கானா பஜானா’, ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்த பிரசாந்த் ராஜ் இப்படத்தை இயக்கிவுள்ளார்.  சந்தானத்திற்கு ஜோடியாக ‘தாராள பிரபு’ படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை தன்யா ஹோப் நடித்துள்ளார். இவர்களுடன் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, YG மகேந்திரன், ஷகிலா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜூன் ஜன்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு, சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது.  இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.