சந்தானம் நடிக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் பாடல் அப்டேட்...
Feb 22, 2025, 12:28 IST
சந்தானம் நடிக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சந்தானம். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடைசியாக இங்க நான் தான் கிங்கு எனும் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை நடிகர் ஆர்யா தயாரிக்க பிரேம் ஆனந்த் இதனை இயக்குகிறார். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஆப்ரோ இதற்கு இசையமைக்கிறார்.