கார்த்திக் சுப்புராஜ் வீட்டில் சந்தோஷ் நாராயணன்... என்ன செய்தார் தெரியுமா..?
கார்த்திக் சுப்புராஜ் வீட்டில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் 'கண்ணாடிப் பூவே' பாடலை பாடி வைப் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ரெட்ரோ. இதனை சூர்யா – ஜோதிகாவின் 2D நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். காதல் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் நடிகை ஸ்ரேயா இந்த படத்தில் சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்து படமானது 2025 மே 1ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. மேலும் இந்த படத்தில் இருந்து கண்ணாடி பூவே எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது.