×

சல்மான் கான் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்?

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வரும் ’சிகந்தர்’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ’சிகந்தர்’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கிய முதல் படமான ’அட்டகத்தி’ மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன், அப்படத்தில் மனதை மயக்கும் மெலடி பாடல்கள் மூலம் கவனம் பெற்றார். இவரது பா.ரஞ்சித் இயக்கிய ’மெட்ராஸ்’ திரைப்படத்தில் 'நான் நீ’ இன்று வரை ரசிகர்களின் விருப்பப் பாடலாக இருந்து வருகிறது.

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய படங்களில் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையின் மூலம் வரவேற்பை பெற்றார். இதனைத்தொடர்ந்து தமிழில் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்த சந்தோஷ் நாராயணன், ரஜினி நடித்த கபாலி, காலா, விஜய் நடித்த பைரவா ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். குறிப்பாக கபாலி படத்தில் ’நெருப்புடா’ தீம் பாடல் இன்று வரை ரஜினி ரசிகர்களின் பிடித்தமான பாடலாக இருந்து வருகிறது.

சந்தோஷ் நாராயணன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் நாக் அஷ்வின் இயக்கிய ’கல்கி 2898AD’ படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தில் பின்னணி இசை பெரும் பலமாக அமைந்தது. இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ’சிகந்தர்’ (Sikander) என்ற பாலிவுட் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் நாராயணன் வித்தியாசமான கூட்டணியில் பின்னணி இசை எப்படி இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
 
’வா வாத்தியார்’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. சந்தோஷ் நாராயணன், நலன் குமாரசாமி கூட்டணியில் இதுவரை ’சூது கவ்வும்’, ’காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.