‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படம் வெளியாகி 17 ஆண்டு நிறைவு...!
Apr 11, 2025, 17:13 IST
‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
மோகன்ராஜா இயக்கத்தில் ரவி மோகன் மற்றும் ஜெனிலியா நடிப்பில் 2008-ம் ஆண்டு ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தெலுங்கில் சித்தார்த், ஜெனிலியா நடிப்பில் வெளியான பொம்மரிலு படத்தின் ரீமேக் ஆகும். அப்பா- மகன் பாசப் போராட்டம், ஜெனிலியாவின் துருதுரு கதாபாத்திரம் என குடும்ப ரசிகர்களை இந்தப் படம் வெகுவாகக் கவர்ந்தது.இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.