×

அதி நடிப்பில் உருவாகும் `சப்தம்' படத்தின் ஸ்னீக் பீக் காட்சி  ரிலீஸ் 

 

அதி நடிப்பில் உருவாகும் சப்தம் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி  வெளியாகியுள்ளது. 

2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். இயக்குனர் அறிவழகனுக்கு ஈரம் திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதற்கடுத்து நகுல் நடிப்பில் வெளிவந்த வல்லினம் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த  பார்டர், குற்றம் 23 திரைப்படத்தை அறிவழகன் இயக்கினார்.

 ஆதி தற்பொழுது மீண்டும் ஈரம் படத்திற்கு பிறகு அறிவழகன் இயக்கும் ’சப்தம்' படத்தில் நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன், சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் டீசர் ஏற்கனேவே வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

<a href=https://youtube.com/embed/mYbQIJbRXd8?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/mYbQIJbRXd8/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்நிலையில், திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.