சரத்குமார் ஹீரோவாக நடிக்கும் புது படம் -டைரக்டர் யார் தெரியுமா ?
Jul 22, 2026, 07:00 IST
மலையாளத்தில் ‘2018’, ‘ரேகாசித்ரம்’, ‘மாளிகப்புரம்’ உள்பட பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த காவ்யா பிலிம் கம்பனி, தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி தலைமையில், தமிழ் திரையுலகில் தனது படத்தை அறிவித்துள்ளது. தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் 12’ என்று பெயரிடப்பட்டுள்ள இதில் சரத்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘கிங்ஸ்டன்’ என்ற படத்தை இயக்கியிருந்த கமல் பிரகாஷ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். கலைவாணன்.ஆர் எடிட்டிங் செய்ய, எஸ்.எஸ்.மூர்த்தி அரங்கம் அமைக்கிறார். தமிழ் பிரபா கூடுதல் திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.