இயக்குனராக மாறிய சரத்குமார் மகள் -என்ன படம் தெரியுமா ?
Feb 18, 2026, 07:00 IST
சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், வரலட்சுமி. ‘போடா போடி’, ‘தாரை தப்பட்டை’, ‘சர்கார்’, ‘விக்ரம் வேதா’, ‘சண்டக்கோழி 2’ உள்பட பல படங்களில் நடித்தார். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். கடந்த 2024ல் மும்பை தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட அவர், பிறகு நடிப்பில் இருந்து சற்று ஒதுங்கியிருந்தார்.
தற்போது தனது தங்கை பூஜாவுடன் இணைந்து ‘தோசா டைரீஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, ‘சரஸ்வதி’ என்ற படத்தை தயாரித்து இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா நடிக்கின்றனர். தமன் இசை அமைக்கிறார். கடந்த மாதம் படப்பிடிப்பு முடிவடைந்தது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.