×

கண் தானம் செய்த நடிகை சரோஜா தேவி உடல் இன்று நல்லடக்கம்

 

நடிகை சரோஜா தேவி நேற்று அவரின் பெங்களுர் வீட்டில் உடல் நல குறைவால் காலமானார் .
அவர் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது 
தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்த பெருமை அவருக்கு உண்டு. திரைத்துறையில் சரோஜாதேவி ஆற்றிய பங்களிப்புக்காக, ஒன்றிய அரசிடம் இருந்து பத்மஸ்ரீ, பத்ம பூஷண் ஆகிய உயரிய விருதுகள் பெற்றார். கர்நாடக அரசால் ‘அபிநய சரஸ்வதி’ என்ற பட்டமும், தமிழக அரசின் ‘எம்.ஜி.ஆர் விருது’, ஆந்திர அரசின் ‘என்.டி.ஆர் தேசிய விருது’, பெங்களூரு பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம், 2008ல் வாழ்நாள் சாதனையாளருக்கான ஒன்றிய அரசின் தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகள் வென்று சாதனை படைத்தார். 
சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், அதேபோல் பிகினி உடையில் நடிக்க மாட்டேன் என சத்தியம் செய்துவிட்டு தான் சினிமாவில் நடிக்க வந்தாராம் சரோஜா தேவி. அந்த பாலிசியை கடைசி வரை கடைபிடித்திருக்கிறார்.
சரோஜாதேவியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஏராளமானோர் அவரது வீட்டு முன்பு திரண்டு வருகிறார்கள். இதனையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணி அளவில் அவரது சொந்த ஊரான சென்னபட்டணா தாலுகா தசவாரா கிராமத்தில்  இறுதிச்சடங்கு நடக்கிறது. சரோஜா தேவியின் உடல் அவரது தாய் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட உள்ளது. சரோஜா தேவியின் விருப்பப்படி அவரது கண்கள் தானமாக அளிக்கப்பட்டுள்ளன.