×

 கலக்கல் போஸில் சார்பட்டா நடிகை.. வைரல் புகைப்படங்கள்

 

‘சார்பட்டா’ படத்தின் கதாநாயகி துஷாரா விஜயனின் கலக்கல் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. 

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. கடந்த வாரம் அமேசான் பிரைமில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் விமர்சன ரீதியாக அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. 1970-களின் பிற்பகுதியில் வடசென்னையில் பிரபலமாகி இருந்த குத்துச்சண்டையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் கபிலனாக ஆர்யாவும், ரங்கன் வாத்தியாராக பசுபதியும், மாரியம்மாளாக துஷாரா விஜயனும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதோடு துணை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள டான்சிங் ரோஸ் அனைவரையும் கவர்ந்துள்ளார். இவர்களோடு டாடி, ரங்கன் வாத்தினயார், வேம்புலி ஆகிய கதாபாத்திரங்களும் வித்தியாசமாக நடித்து அசத்தியிருக்கிறார்கள். 

இந்நிலையில் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவரின் நடிப்பிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலக்கல்  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்த இந்த புகைப்பட்ங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.