சசிகுமார் நடித்த Freedom படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ
Sep 29, 2024, 17:31 IST
சசிகுமார் நடிப்பில் அண்மையில் நந்தன் திரைப்படம் வெளியானது.. இத்திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக சசிகுமார் ஃப்ரீடம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். சசிகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெலியிட்டுள்ளது. இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும் 1945 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.