×

`சட்டம் என் கையில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு 
 

 
நடிகர் சதீஷ் காமெடியனாக பல படங்களில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். விஜய் உள்ளிட்டவர்களுடன் இணைந்து காமெடி கலாட்டாக்களை செய்து வந்த இவர் நாய் சேகர் படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். அதைத்தொடர்ந்து வித்தைக்காரன் மற்றும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது சதீஷுக்கு. அதைத்தொடர்ந்து சட்டம் என் கையில் எனும் படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில வருடங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தை சிக்சர் திரைப்படத்தை இயக்கிய சச்சி இயக்கியுள்ளார். சதீஷுடன் இணைந்து வித்யா பிரதீப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி தற்பொழுது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.