×

உருவானது ஸ்கிரிப்ட் வங்கி.. புதிய முயற்சியை தொடங்கி வைத்த இயக்குனர் இமயம் !

 

தயாரிப்பாளர்களுக்கு சிறந்த கதை மற்றும் திரைக்கதையை கொடுக்க ஸ்கிரிப்ட் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. 

சினிமா என்பது பல இளைஞர்கள் கனவு உலகம். இந்த சினிமா பல பரிமாணங்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. சினிமா இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலைமை தற்போது உருவாகிவிட்டது. தற்போதைய சினிமாவில் கதை மற்றும் திரைக்கதை என்பது முக்கியமான விஷயமாக உள்ளது. அதனால் கதை மற்றும் திரைக்கதையை இயக்குனர்கள் கவனமுடன் கையாளுகின்றனர். 

சமீபகாலமாக நல்ல கதை மற்றும் திரைக்கதை கிடைப்பது என்பது முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் ஸ்கிரிப்ட் பேங்க் ஒன்று தொடங்கியுள்ளது. அதன்படி ‘ஸ்கிரிப்ட் டிக்’ என்ற பெயரில் ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவன குழுவில் பாடலாசிரியர் மதன் கார்க்கி, தயாரிப்பாளர் தனஞ்செழியன், திரைக்கதை ஆலோகர் ராஜேஷ் உள்ளனர். 

இந்த ‘ஸ்கிரிப்ட் டிக்’ நிறுவனத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், இதுபோன்ற முயற்சி எங்கள் காலத்தில் இல்லையே என்று தோன்றுகிறது. இந்த ஆரோக்கியமான விஷயத்தை தமிழ் சினிமா வளர வேண்டும் என்ற முயற்சியில் பாடலாசிரியர் கார்க்கியும், தனஞ்செயனும் முன்னெடுத்துள்ளனர். அதனால் இனி வரும் காலங்களில் திரைக்கதை வங்கி அனைவருக்கும் பயன் உள்ளதாக என கூறப்படுகிறது.