×

“நமக்கெதற்கு மாத்தையா? மாற்றய்யா?” விஜய் சேதுபதியிடம் முத்தையா முரளிதரன் படத்தை கைவிடக் கோரும் சீனு ராமசாமி!?

விஜய் சேதுபதி, கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதை அடுத்து அந்த முடிவை மாற்றுமாறு இயக்குனர் சீனு ராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானதும் உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் பலர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் விஜய் சேதுபதி அந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர். பல லட்சம்
 

விஜய் சேதுபதி, கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதை அடுத்து அந்த முடிவை மாற்றுமாறு இயக்குனர் சீனு ராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானதும் உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் பலர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் விஜய் சேதுபதி அந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

பல லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை நாட்டைச் சேர்ந்த ஒருவரைப் பற்றிய படத்தில் எப்படி நடிக்கலாம் என்று பலர் விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையடுத்து தற்போது இயக்குனர் சீனு ராமசாமியும், விஜய் சேதுபதி தனது முடிவை மாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

“விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள்

விஜய் சேதுபதி நடிக்கும்
யாதும் ஊரே யாவரரும் கேளீர் திரைப்படம் அதற்கு சான்று.
ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து.
உள்ளங்கைக்கு முத்தம்.

மக்கள் செல்வா..
நீரே எங்கள்
தமிழ் சொத்து அய்யா
நமக்கெதற்கு மாத்தையா?
மாற்றய்யா?” என்று தெரிவித்துள்ளார்.

‘800’ என்று தலைப்பிடப்பட்ட இந்தப் படத்தை.எம்.எஸ்.ஸ்ரீபதி என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை நடிகர் ராணாவின் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ‘800’ படத்தின் அப்டேட் வெளியாக இருப்பதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.