ரிலீசுக்கு தயாராகும் ‘நானே வருவேன்’... செல்வராகவன் கொடுத்த சூப்பர் அப்டேட் 

 
naane varuven

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘நானே வருவேன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை செல்வராகவன் வெளியிட்டுள்ளார். 

செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் படத்தை விரைவில் வெளியிட படக்குழு வேகமாக பணியாற்றி வருகிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். 

nane varuven

மேலும் இந்த படத்தில் தனுஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து நடித்துள்ளனர். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது. இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் இந்துஜா, யோகிபாபு, ஜெர்மன் நாட்டு நடிகை எல்லிஅவ்ர்ராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டு தற்போது தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட்டை செல்வராகவன் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தில் தன் பகுதி டப்பிங்கை இன்று செல்வராகவன் தொடங்கியுள்ளார். இதனால் தயாரிப்பு பணிகள் முடிந்து விரைவில் படம் ரிலீசாகும் என தெரிகிறது.