×

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியானது!

தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது. தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணிக்கு எந்தளவிற்கு வரவேற்பு உள்ளதோ அதே அளவிற்கு தனுஷ்- செல்வராகவன் கூட்டணிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் நிலவி வருகிறது. ‘புதுப்பேட்டை 2’ எப்போது வெளியாகும் என கோலிவுட் ரசிகர்கள் கேள்வி எழுப்பாத நாளில்லை என்றே சொல்லலாம். தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ‘கர்ணன்’ படமும் முடியும்
 

தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.

தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணிக்கு எந்தளவிற்கு வரவேற்பு உள்ளதோ அதே அளவிற்கு தனுஷ்- செல்வராகவன் கூட்டணிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் நிலவி வருகிறது.

‘புதுப்பேட்டை 2’ எப்போது வெளியாகும் என கோலிவுட் ரசிகர்கள் கேள்வி எழுப்பாத நாளில்லை என்றே சொல்லலாம்.

தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ‘கர்ணன்’ படமும் முடியும் தருவாயில் இருக்கிறது.

தனுஷ் தற்போது ஆனந்த் எல் ராயுடன் இந்தி திரைப்படமான ‘அட்ரங்கி ரே’ படப்பிடிப்பில் கலந்து வருகிறார் . டிசம்பர் மாதத்திற்குள் அந்தப் படத்தை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், செல்வராகவன் உடன் தனுஷ் கூட்டணி அமைக்கும் படம் மார்ச் மாதம் முதல் துவங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் வேலைகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். செல்வராகவன் படத்திற்கான இசைக்காக அவருடன் இதுநாள் வரை பணியாற்றி வந்துள்ளார்.

அட்ரங்கி ரே படத்தை அடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். அப்படத்தை அடுத்து செல்வராகவன் கூட்டணியில் இணைவார் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படம் மார்ச் மாதம் முதல் துவங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.