×

அடுத்து தனுஷ் இல்லை… மற்றொரு இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்!?

இயக்குனர் செல்வராகவன் முன்னோக்கு சிந்தனை மிகவும் திறமையான இயக்குனர். வழக்கமான சினிமா அல்லாமல் தன்னுடைய வித்தியாசமான கதைக்களங்களால் தமிழ் ரசிகர்கள் மனதில் முத்திரை பதித்த இயக்குனர் தான் செல்வராகவன். இவர் படங்களில் வரும் ஹீரோக்கள் ரொமான்ஸில் கலக்கும் அழகு ஆண்களாகவோ, மாஸ் காட்டும் மனிதராகவோ இருக்கமாட்டார்கள். செல்வராகவனின் ஹீரோக்கள் நாம் நமது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவரை அப்படியே திரையில் பார்ப்பது போல் இருக்கும். பெரும்பான்மையான இயக்குனர்கள் நடிகைகளை, ஒரு லவ் மெட்டீரியலாகத்தான் தங்கள் படங்களில் பயன்படுத்தியிருப்பர்.
 

இயக்குனர் செல்வராகவன் முன்னோக்கு சிந்தனை மிகவும் திறமையான இயக்குனர். வழக்கமான சினிமா அல்லாமல் தன்னுடைய வித்தியாசமான கதைக்களங்களால் தமிழ் ரசிகர்கள் மனதில் முத்திரை பதித்த இயக்குனர் தான் செல்வராகவன். இவர் படங்களில் வரும் ஹீரோக்கள் ரொமான்ஸில் கலக்கும் அழகு ஆண்களாகவோ, மாஸ் காட்டும் மனிதராகவோ இருக்கமாட்டார்கள். செல்வராகவனின் ஹீரோக்கள் நாம் நமது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவரை அப்படியே திரையில் பார்ப்பது போல் இருக்கும்.

பெரும்பான்மையான இயக்குனர்கள் நடிகைகளை, ஒரு லவ் மெட்டீரியலாகத்தான் தங்கள் படங்களில் பயன்படுத்தியிருப்பர். ஆனால் செல்வராகவனின் படங்களில் வரும் பெண்கள் பெரும் மனவலிமை மற்றும் உறுதி கொண்ட பெண்களாக இருப்பர்.

செல்வராகவன் கடைசியாக சூர்யா நடிப்பில் என்ஜிகே படத்தை இயக்கியிருந்தார். ‘சாணி காயிதம்’ என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் நடிக்கவுள்ளார்.

இதற்கு முன் செல்வராகவன் சந்தானத்தை வைத்து இயக்கிய ‘மன்னவன் வந்தானடி’, எஸ்ஜே சூர்யாவை வைத்து இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படங்கள் சில காரணங்களால் பாதியில் நிற்கின்றன.

அடுத்ததாக தனுஷை வைத்து படம் எடுக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தனுஷ் பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் தற்போதைக்கு செல்வராகவன் படத்தில் நடிக்க முடியாத சூழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதனால் செல்வராகவன் மற்றொரு படம் எடுக்க முடிவு செய்துள்ளாராம். அந்தப் படத்திற்காக கவுதம் கார்த்திக் உடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.