×

'பைரேட்ஸ் ஆப் தி கரிபியன்' பட லுக்கில் மிரட்டும் செல்வராகவன்!

இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. சினிமாவில் தன் வித்தியாசமான கதைக்களங்களால் தமிழ் ரசிகர்கள் மனதில் முத்திரை பதித்த இயக்குனர் தான் செல்வராகவன். இவர் படங்களில் வரும் ஹீரோக்கள் ரொமான்ஸில் கலக்கும் அழகு ஆண்களாகவோ, மாஸ் காட்டும் மனிதராகவோ இருக்கமாட்டார்கள். செல்வராகவனின் ஹீரோக்கள் நாம் நமது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவரை அப்படியே திரையில் பார்ப்பது போல் இருக்கும். அதேபோல் தான் கதாநாயகிகளும். ஊரடங்கால் வீட்டில் நேரத்தை செலவழித்து
 

இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
சினிமாவில் தன் வித்தியாசமான கதைக்களங்களால் தமிழ் ரசிகர்கள் மனதில் முத்திரை பதித்த இயக்குனர் தான் செல்வராகவன். இவர் படங்களில் வரும் ஹீரோக்கள் ரொமான்ஸில் கலக்கும் அழகு ஆண்களாகவோ, மாஸ் காட்டும் மனிதராகவோ இருக்கமாட்டார்கள். செல்வராகவனின் ஹீரோக்கள் நாம் நமது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவரை அப்படியே திரையில் பார்ப்பது போல் இருக்கும். அதேபோல் தான் கதாநாயகிகளும்.

ஊரடங்கால் வீட்டில் நேரத்தை செலவழித்து வரும் செல்வராகவன் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். தற்போது தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை செல்வராகவன் வெளியிட்டுள்ளார். பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் பட லுக்கில் இருக்கும் வீடியோவை தன் மனைவி எடிட் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். “என் மனைவி கீதாஞ்சலி என் முகத்தை என்ன செய்திருக்கிறார் பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.