×

"கடந்த காலத்துக்கு போனா இதெல்லாம் தான் செய்வேன்"… செம ரொமான்ஸ் ஃமூட்-ல் இருக்கும் இயக்குனர் செல்வராகவன்!

எல்லா துறைகளிலும் வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல் தன்னுடைய பாணியிலே திறமையை வெளிப்படுத்தி முத்திரை பதிப்பவர்கள் வெகுசிலரே. அதுபோல் சினிமாவில் தன் வித்தியாசமான கதைக்களங்களால் தமிழ் ரசிகர்கள் மனதில் முத்திரை பதித்த இயக்குனர் தான் செல்வராகவன். இவர் படங்களில் வரும் ஹீரோக்கள் ரொமான்ஸில் கலக்கும் அழகு ஆண்களாகவோ, மாஸ் காட்டும் மனிதராகவோ இருக்கமாட்டார்கள். செல்வராகவனின் ஹீரோக்கள் நாம் நமது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவரை அப்படியே திரையில் பார்ப்பது போல் இருக்கும். பெரும்பான்மையான இயக்குனர்கள் நடிகைகளை, ஒரு லவ்
 

எல்லா துறைகளிலும் வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல் தன்னுடைய பாணியிலே திறமையை வெளிப்படுத்தி முத்திரை பதிப்பவர்கள் வெகுசிலரே. அதுபோல் சினிமாவில் தன் வித்தியாசமான கதைக்களங்களால் தமிழ் ரசிகர்கள் மனதில் முத்திரை பதித்த இயக்குனர் தான் செல்வராகவன். இவர் படங்களில் வரும் ஹீரோக்கள் ரொமான்ஸில் கலக்கும் அழகு ஆண்களாகவோ, மாஸ் காட்டும் மனிதராகவோ இருக்கமாட்டார்கள். செல்வராகவனின் ஹீரோக்கள் நாம் நமது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவரை அப்படியே திரையில் பார்ப்பது போல் இருக்கும்.

பெரும்பான்மையான இயக்குனர்கள் நடிகைகளை, ஒரு லவ் மெட்டீரியலாகத்தான் தங்கள் படங்களில் பயன்படுத்தியிருப்பர். ஹீரோவுடன் காதல் செய்ய, பாடலுக்கு டான்ஸ் ஆட, கவர்ச்சி காட்ட என இந்த மாதிரி உப்பு சப்பில்லாத விஷயங்களுக்கு மட்டுமே ஹீரோயின்கள் காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். ஆனால் செல்வராகவனின் பெண் கதாபாத்திரங்கள் அப்படியே வேறு. வாழ்க்கை போராட்டங்களால், ஏமாற்றங்களால் துவண்டு நொறுங்கிக் கிடக்கும் கதாநாயகனை உற்ற துணையாய் அருகிலிருந்து அவனை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் வீரப்பெண்மணிகளாக ஆக காட்சிப்படுத்தி இருப்பார் செல்வராகவன். செல்வராகவன் படங்களில் வரும் கதாநாயகிகளின் திமிருக்கு தனி இலக்கணம் உண்டு. தனது படங்களில் அறிமுகமாகும் கதாநாயகிகளின் முழு நடிப்பையும் வெளிக்காட்ட வைத்து அவர்களை பெரிய நடிகையாக மாற்றும் திறமை கொண்டவர் அவர்.

ஊரடங்கால் வீட்டில் நேரத்தை செலவழித்து வரும் செல்வராகவன் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில் “கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்?
நான், நண்பர்களுடன் மாலை முழுதும் அரட்டை அடித்து, விளையாடி, தூரத்தில் அப்பா நிழல் பார்த்து ,வீட்டிற்கு ஓடி ,அம்மா வைத்ததை சாப்பிட்டு, எந்தக் கவலையும் இல்லாது தூங்கிப் போன பொழுதை கேட்பேன்! அல்லது …காலை முதல் தெரு ஓரம் காத்திருந்து அவள் என்னைக் கடந்து போகையில் உரசும் விழிகளின் தாக்கம் கேட்பேன்” என்று கூறியிருக்கிறார்.