×

செல்வராகவன்- எஸ்ஜே சூர்யா கூட்டணியின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’… விரைவில் ரிலீஸ்!?

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் 2017-ம் ஆண்டே வெளியாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அப்படம் வெளியாவதில் தடை ஏற்பட்டது. நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். செல்வராகவன் -எஸ்ஜே சூர்யா காம்போவில் உருவான அப்படத்தைப் பார்க்க கோலிவுட் ரசிகர்கள் ஆர்வம் காண்பித்து வந்தனர். செல்வராகவன் முதல் முறையாக திரில்லர் ஜேர்னரில் எடுத்த
 

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் 2017-ம் ஆண்டே வெளியாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அப்படம் வெளியாவதில் தடை ஏற்பட்டது.

நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

செல்வராகவன் -எஸ்ஜே சூர்யா காம்போவில் உருவான அப்படத்தைப் பார்க்க கோலிவுட் ரசிகர்கள் ஆர்வம் காண்பித்து வந்தனர். செல்வராகவன் முதல் முறையாக திரில்லர் ஜேர்னரில் எடுத்த படம் என்பதாலும் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தற்போது நீண்ட காலத்திற்குப் பின்னர் அப்படம் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெஞ்சம் மறப்பதில்லை படக்குழுவினர் படத்தின் வியாபாரம் மற்றும் ரிலீசுக்காக ஒரு பிரைவேட் ஸ்க்ரீனிங் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனராம். படத்திற்கு பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும், விரைவில் படம் வெளி வருவதற்கான சாதகமான அறிகுறிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்கில் கலந்துகொண்டு படத்தைப் பார்த்த நபர் ஒருவர் படத்தைப் பாராட்டிப் பதிவிட்டிருந்தார். செல்வராகவன் அதற்கு நன்றி கூறி ரிப்ளை செய்திருந்தார்.

இருப்பினும் படக்குழுவினரிடமிருந்து ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய ஆர்வம் காண்பித்து வருவதாகவும் கூறப்படுகிறது.