×

செப்டம்பரில் ரிலீஸாகும் தமிழ் படங்கள்..  ரசிகர்களுக்கு செம விருந்து... 

 

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ் சினிமாவில் சக்சஸ்புல் மாதமாகவே அமைந்தது. பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த அந்தகன், விக்ரம் நடித்த தங்கலான், அருள்நிதியின் டிமாண்டி காலனி 2 மற்றும் மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் ஆகியவை பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வசூலையும் வாரிக்குவித்தது. இந்த நிலையில், செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ள தமிழ் படங்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.

செப்டம்பர் மாதம் ஆரம்பமே பிரம்மாண்ட வசூல் வேட்டை காத்திருக்கிறது. ஏனெனில் முதல் படமாக நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அப்படத்துக்கு போட்டியாக எந்த தமிழ்படமும் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் கோலிவுட்டின் முதல் ஆயிரம் கோடி வசூல் சாதனையை கோட் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இதனையடுத்து செப்டம்பர் 20ஆம் தேதி கடும் போட்டி நிலவுகிறது. செப்டம்பர் 20-ந் தேதி யோகிபாபுவின் கோழிப்பண்ணை செல்லதுரை, ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் நடித்த லப்பர் பந்து, சதீஷ் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்துள்ள சட்டம் என் கையில், சசிகுமார் நடித்துள்ள நந்தன் மற்றும் காளிவெங்கட் நடித்த தோனிமா ஆகிய 5 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இதில் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படத்தை சீனு ராமசாமி இயக்கி உள்ளார். அதேபோல் நந்தன் படத்தை இரா சரவணன் இயக்கி இருக்கிறார். ஒரே நாளில் 5 படங்கள் ரிலீஸாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள படம் மெய்யழகன். இப்படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர ஜீவா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள பிளாக், விஜயகாந்தின் இளைய மகன் ஹீரோவாக நடித்துள்ள படைத்தலைவன் ஆகிய திரைப்படங்களும் செப்டம்பரில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.