கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ பட அப்டேட்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அமீர், சமுத்திரக்கனி, ‘ஆடுகளம்’ கிஷோர், ஆண்ட்ரியா நடிக்கும் ‘அரசன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாக, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘அரசன்’ செயல்பாட்டுக்கு திரும்பிவிட்டான் என்று குறிப்பிட்டுள்ளார். வெற்றிமாறனின் ‘வட சென்னை’ சினிமாடிக் யுனிவர்ஸாக உருவாகும் இப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். அதுபோல், கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ என்ற படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் நேற்று தொடங்கியது.
இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில், ‘ஆடி வெள்ளி பூத்திருச்சு, புது பொழுது விடிஞ்சிருச்சு, ‘சேயோன்’ 2ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கிருச்சு’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 38 விநாடிகள் ஓடும் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. அதில், ‘ஆடி வெள்ளி பூத்திருச்சு, உச்சி பூச காத்திருக்கு, ஏத்துக்கிட்டு வெளியே வா, வெளியே வா, வெளியே வா’ என்ற ‘விருமாண்டி’ படத்தின் பாடல் வரிகள் திரையில் தெரிய, குரலும் அதை ஒலிக்க, உச்சிமலைக்காட்டில் தனியாக நிற்கும் ஒருவரை நோக்கி கேமரா பயணிக்கிறது