×

‘RC15’ படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் வெளியிட்ட ஷங்கர்…. 'இந்தியன்2' வருமா? வராதா?

 

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன்2 திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு பல தடைகளை கடந்து மீண்டும் துவங்கப்பட்டு நடந்து வந்தது. அதே போன்று ராம்சரணின் 15வது திரைப்படத்தையும் ஷங்கர் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார்.  

அதாவது, ஒரு படத்திற்கு 12நாட்கள் என மாதத்தில்  நாட்களை  பிரித்து வேலை செய்கிறார். அதன்படி கடந்த தினங்களில் இயக்குநர் சங்கர் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டு பிசியாக இருந்தார். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.