சங்கர் இயக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் டீசர் குறித்து படக்குழு அப்டேட்
Oct 31, 2024, 19:36 IST
சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தியன்-2 படத்தின் எதிர்மறையான விமர்சனங்களைத் தொடர்ந்து சங்கர் இந்த படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார்.