×

மான நஷ்ட வழக்குப்பதிவு செய்துள்ள ஷில்பா ஷெட்டியின் கணவர்.. என்ன காரணம்?

 

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, ஊடகங்கள் மற்றும் YouTube சேனல்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தரா என்பவர் ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது; மேலும், ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்திராவின் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. சொத்துக்கள் முடக்கப்பட்டதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கு ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவருக்கு சாதகமாக வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஊடகங்கள் மற்றும் YouTube மீது அவதூறு செய்திகளை தொடர்ந்து பதிவு செய்து வருவதாக மான நஷ்ட வழக்கு ராஜ் குந்தரா பதிவு செய்துள்ளார். ஐ.பி.சி 356வது பிரிவின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ராஜ் குந்தரா கூறிய போது, "என்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அவையெல்லாம் நீக்குமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், கால அவகாசம் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் விசாரணைகளில் இருக்கிறேன், என்னை குற்றவாளியாக காட்டுவது தவறானது. எனவே, தான் வழக்கு தொடர்ந்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.