3BHK படத்தின் படப்பிடிப்பு நிறைவு
Updated: Mar 6, 2025, 15:43 IST
நடிகர் சித்தார்த் நடிக்கும் 3 பிஎச்கே படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்தா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சித்தார்த் நடிப்பில் இந்தியன் - 2, மிஸ் யூ படங்கள் வெளியானது. இப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இவரது 40-வது படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்குகிறார்.