×

மதுரை கல்லூரியில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு

 

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தனது 43வது படத்தில் நடிக்க உள்ளார். 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சுதா கொங்கரா படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான், மற்றும் நஸ்ரியா ஆகியோர் நடிக்கின்றனர். புறநானூறு என படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடங்கவுள்ளது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் செட் அமைத்து சூர்யா மற்றும் துல்கர் சல்மான் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்படஉள்ளன.