×

ஒரு வழியாக எக்ஸ் பக்கத்தை மீட்ட ஸ்ரேயா கோஷல்... ஆனாலும்...

 

ஒரு மாதத்திற்கு பிறகு ஹேக்கர்களிடம் இருந்து தனது எக்ஸ் பக்கத்தை மீட்டுள்ளதாக பாடகி ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார்.

ஸ்ரேயா கோஷல், தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தனது கணக்கை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் எக்ஸ் தளத்தில் தனது புகைப்படத்தை ஏஐ மூலம் மாற்றி, பொய்யான தகவல்களுடன் செய்திகள் பரவுவதாகவும், அதனை கிளிக் செய்தால் போலி இணையதளத்திற்கு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே அதனை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஐ எம் பேக். இனி தொடர்ந்து என்னுடைய பக்கத்தில் எழுதவும் பேசவும் செய்வேன். ஆம், கடந்த பிப்ரவரி மாதம் ஹேக் செய்யப்பட்டது. எக்ஸ் குழுவுடன் தொடர்பு கொள்வதில் ஏற்பட்ட பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அவர்களிடம் இருந்து உதவி கிட்டியது. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது.