×

தந்தை, காதலனுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாடிய ஸ்ருதிஹாசன்

 

நடிகை ஸ்ருதிஹாசன் இந்த வருட புத்தாண்டை மகிழ்ச்சியில் திளைக்கும் விதமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். 
இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் தனது தந்தை கமல், தனது காதலர் சாந்தனு, தனது சகோதரி சுகாசினி, மற்றும் அவரது கணவர் இயக்குநர் மணிரத்னம் என தனது நெருங்கிய குடும்ப உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் ஸ்ருதிஹாசன். 

இந்த புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான சில புகைப்படங்களையும், அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.