×

`சுபம்' படத்தின் டிரெய்லர் வெளியீடு...!

 

 நடிகை சமந்தா தயாரித்து உள்ள `சுபம்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உக்காந்து. 

 
நடிகை சமந்தா சமீபத்தில் தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார். டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ‘சுபம்” என்ற திரைப்படத்தை தயாரித்து முடித்துள்ளார். சுபம் திரைப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் வரும் மே 9 ஆம் தேதி வெளியாகிறது. தற்பொழுது திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. <a href=https://youtube.com/embed/5pB51v3EpeQ?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/5pB51v3EpeQ/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

ஒரு நண்பர் கூட்டம் திருமணம் செய்துக் கொள்கின்றனர். அவர்களது மனைவி அனைவரும் குறிப்பிட்ட சீரியலை தொலைக்காட்சியில் பார்த்த பிறகு அவர்களின் கட்டுபாட்டை இழந்து பேய் பிடித்தது போல் நடந்துக் கொள்கின்றனர். கணவர்கள இதனால் பயந்து இருக்கின்றனர். ஒட்டு மொத்த ஊரில் உள்ள பெண்களுமே இப்படி நடந்து கொள்கிறார்கள் போன்ற காட்சிகள் நகைச்சுவையாக டிரெய்லரில் அமைந்துள்ளது.

டிரெய்லர் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்தை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படத்தின் கதையை வசந்த் மரிகாண்டி எழுத பிரவீன் இயக்கியுள்ளார். இவர்கள் இதற்கு முன் சினிமா பண்டி திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஹர்ஷித், ஷிரியா, சரண், ஷாலினி, கவிரெடி ஸ்ரீனிவாஸ் மற்றும் ஷ்ராவனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.