×

கமல், மணிரத்னத்துடன் தல தீபாவளி கொண்டாடிய சித்தார்த்- அதிதி ராவ் 

 
நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் `பாய்ஸ்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு வெளிவந்த சித்தா படம் வெற்றியை கொடுத்தது. இதற்கிடையே, நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலில் இருப்பதாக செய்திகள் பரவியது. இதைதொடர்ந்து, நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் தங்களது தல தீபாவளியை கொண்டாடியுள்ளனர். நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் மற்றும் குடும்பத்தினருடன் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தல தீபாவளி கொண்டிய தம்பதிக்கு இணையத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.