×

ஒரு வழியாக வெளியாகும் சித்தார்த்தின் ‘டக்கர்’... ரிலீஸ் தேதி அறிவிப்பு !

 

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டக்கர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் சித்தார்த். வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ள அவர்,  'கப்பல்' படத்தின் இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘டக்கர்’.இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா நடித்துள்ளார். இவர்களுடன் கெளஷிக், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

காதல், ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் செம ஸ்டைலிஷ்ஷான லுக்கில் சித்தார்த் நடித்தள்ளார்.  இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே படப்பிடிப்பு முடிக்கப்பட்ட இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பு பணியில் இருந்தது. 

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜூன் 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.