ஜேசன் சஞ்சய்யின் முதல் படம்-சிக்மா பட விமர்சனம்
ஷீலா ராஜ்குமாரின் மறைவுக்கு பிறகு அவரது மகன் சந்தீப் கிஷன், தனது குடும்பச் சொத்தான பழைய நூலகத்தை சிரமப்பட்டு நடத்துகிறார். அவரது தந்தை வாங்கிய கடன் ஒரு கோடி ரூபாய்க்கு மேலிருக்க, அதை எப்படியாவது அடைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தவிக்கிறார். இந்நிலையில், அவரது வாழ்க்கையில் சூதாட்டம் மற்றும் போதை மருந்து வியாபார கும்பல் ஒன்று குறுக்கிடுகிறது. அதன் பிறகு நடப்பது மீதி கதை.
ஆக்ஷன் படத்தில் அனைத்து கேரக்டர்களுமே ஏதாவது பேசிக்கொண்டே இருப்பது சோர்வை தருகிறது. கேரக்டருக்கு தேவையான நடிப்பை சந்தீப் கிஷன் வழங்கியுள்ளார். அவரை காதலிக்கும் ஃபரியா அப்துல்லாவுக்கு அதிக வேலையில்லை. டாக்டர் கேரக்டரில் ராஜூ சுந்தரம் ஏதோ பேசிவிட்டு போகிறார். கவிதை கணேஷாக அன்புதாசன், சிரிக்க வைக்க ரொம்பவே சிரமப்பட்டுள்ளார்.
வில்லன்கள் சம்பத்ராஜ், ஷிவ் பண்டிட், யோக் ஜேபி மற்றும் மகாலட்சுமி சுதர்சனன், கமலேஷ் ஜெகன், கிரண் கொண்டா, நாக சாய் ஆகியோர், இயக்குனர் சொன்னதை செய்திருக்கின்றனர்