×

"எமகாதகி" படத்தின் முதல் பாடல் 'சிலு சிலு சிரிப்பாய்' வெளியானது...!

 

அமானுஷ்ய சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள ‘எமகாதகி' படத்தின் முதல் பாடல் 'சிலு சிலு சிரிப்பாய்' வெளியாகி உள்ளது.  

பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ள இப்படத்தில் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி ஆகியோருடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். உமா மஹேஷ்வர உக்ரா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமான ரூபா கொடுவாயுர் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். அமானுஷ்ய சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு 'எமகாதகி' என்று பெயரிடப்பட்டுள்ளது.



படத்தை சரங் பிரதார்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் படம் மார்ச் மாதம் 7-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், படத்தின் முதல் பாடலான சிலு சிலு சிரிப்பாய் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை எஸ்.ராஜேந்திரன் வரிகளில் தஞ்சை செல்வி பாடியுள்ளார்.