×

சிம்பு படத்தில் நடிக்கும் உலக நாயகன்.. இதென்னா செம்மா அப்டேட்டா இருக்கு !

 

 சிம்புவின் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் நடிகர் கமல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிம்புவின் நடிப்பில் வெளியான ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய தொடர் வெற்றியை பெற்றுள்ளது. இந்த வரிசையில் வெற்றிப் பெற காத்திருக்கும் திரைப்படம் ‘பத்து தல’. இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. மிரட்டலாக உருவாகியுள்ள இந்த படமும் சிம்பிற்கு ஹாட்ரிக் வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படத்தை அடுத்து சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சிம்புவின் 48வது படமாக உருவாகும் இந்த படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.  ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த தேசிங்கு பெரியசாமி இந்த படத்தை இயக்கவுள்ளார். சுமார் 100 கோடியில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் தன்னுடன் கமல் நடிக்கவேண்டும் என்ற விருப்பத்தை சிம்பு வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.