×

"இப்படத்தில் பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கிறேன்"-சிம்பு கூறும் படம் எது தெரியுமா? . 

 

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன் டி.ஆர்., பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இது குறித்து சிம்பு கூறியதாவது: அரசன் படத்திற்காக அனிருத்துடன் இணைந்து பணியாற்றுகிறேன். இது நீங்கள் நினைப்பது போல ஒரு சிறிய படம் கிடையாது.

என் கதாபாத்திரத்தின் இளம் வயது முதல் முதுமை வரையிலான வாழ்க்கைப் பயணத்தை இப்படம் பதிவு செய்யும். இதற்காக பல்வேறு வயது தோற்றங்களில், பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கிறேன். இந்தியில் உருவான ‘துரந்தர்’ திரைப்படம் அந்தத் திரையுலகிற்கு பெருமை சேர்த்தது. இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் அந்தப் படத்தைப் பார்த்து ரசித்தனர்.

அதேபோல், ‘அரசன்’ திரைப்படமும் கோலிவுட் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்” என்று சிம்பு தெரிவித்துள்ளார். ‘அரசன்’ திரைப்படம் 2027 பொங்கலுக்கு வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இப்படம் பொங்கல் வெளியீடாக வரவில்லை. படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்ய நாங்கள் விரும்பவில்லை.