சிம்பு இரண்டு வேடங்களில் நடிக்கும் அரசன் -இயக்குனர் யார் தெரியுமா ?
Oct 10, 2025, 07:00 IST
நடிகர் சிம்பு தமிழில் மன்மதன் கோவில் போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்றார் .இவர் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் ,மற்றும் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் விண்ணை தாண்டி வருவாயா போன்ற வெள்ளி விழா படங்களில் நடித்துள்ளார் .
சிலம்பரசன் "தக் லைப்" திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வைரலானது.
சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக ‘எஸ்டிஆர் 49’ என்ற பெயரிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இப்படத்தின் டைட்டிலை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளார். அதன்படி, சிம்பு-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு "அரசன்" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது