×

எனக்கு கல்யாணம் நடந்தா தான் உனக்கு அது நடக்கும்… தனது செல்லப்பிராணியிடம் கோரிக்கை வைத்த சிம்பு!

நடிகர் சிம்பு தனது செல்லப்பிராணி நாயுடன் வேடிக்கையாக கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த சிம்பு பின்னர் மீண்டும் மாஸாக கம்பேக் கொடுத்தார். அதையடுத்து அவரது ஒவ்வொரு நகர்வுகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் சிம்பு சகோதரியின் மகன் அவருக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த வீடியோ வைரலானது. அந்த வகையில் தற்போது சிம்பு தனது செல்லப்பிராணி நாய் கோகோவுடன் வேடிக்கையாகப் பேசி கொஞ்சி விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி
 

நடிகர் சிம்பு தனது செல்லப்பிராணி நாயுடன் வேடிக்கையாக கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த சிம்பு பின்னர் மீண்டும் மாஸாக கம்பேக் கொடுத்தார். அதையடுத்து அவரது ஒவ்வொரு நகர்வுகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் சிம்பு சகோதரியின் மகன் அவருக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த வீடியோ வைரலானது. அந்த வகையில் தற்போது சிம்பு தனது செல்லப்பிராணி நாய் கோகோவுடன் வேடிக்கையாகப் பேசி கொஞ்சி விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், “முதல்ல எனக்கு கல்யாணம் நடக்கணும், அப்புறம் தான் உனக்கு. நான் மட்டும் தனியா இருக்கும் போது நீ ஜாலியா இருந்தா அது நியாயம் கிடையாது.” என்று ஜாலியாக பேசியுள்ளார். அதற்கு அந்த நாய் கொடுக்கும் ரியாக்ஷன்களும் பார்ப்போர் ரசிக்கும் படியாக உள்ளது. காதலர் தினத்தில் கோகோவுடன் தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார் சிம்பு.